Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஷ்ணுவின் 8-வது அவதாரமான பகவான் கிருஷ்ணரின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி என்கிற இந்து பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழில் ஆவணி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் 8-வது நாளான அஷ்டமி அன்று கிருஷ்ன ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுகிறது, இது வழக்கமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் (26) திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.
கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இந்த மகிழ்ச்சியான நிகழ்வு இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது, பக்திப் பாடல்களைப் பாடுவது மற்றும் கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் நடத்துவது, உரியடி போன்ற பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி என்பது திருமாலின் கிருஷ்ண அவதாரத்தை போற்றுவதற்காகவும், கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காகவும், கண்ணன் கீதையில் சொன்ன மொழிகளின் படி வாழ்ந்து, இறைவனின் திருவடிகளை அடைவதற்கான வழியை காணும் ஒரு அற்புதமான நாளாகும். இந்த நாளில் கண்ணனின் அருளை பெறுவதற்காக வீடுகளிலும், கோவில்களிலும் பல விதமான பூஜைகள், அபிஷேக, அலங்காரங்கள் ஆகியவை நடத்தப்படுகின்றன. வீடுகளில் கிருஷ்ணரின் பாதங்களை கோலமாக வரைந்து, அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைத்தும் வழிபடுவதுண்டு. அதே போல் கண்ணனை வழிபடும் போதும் அவருக்குரிய பல விதமான மந்திரங்களை சொல்லி பாராயணம் செய்வது சிறப்பு.
கிருஷ்ணன் அருளை பெறுவதற்கு கோகுலாஷ்டமி நாளில் சகாதேவர் இயற்றிய அற்புதமான கிருஷ்ண மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரங்களை எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். பல நுட்பங்களை அறிந்தவர். உலகையே காக்கும் கிருஷ்ணரையே தனது கட்டுக்குள் வைக்கக் கூடிய சக்தி படைத்த சிறந்த பக்திமான். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கிருஷ்ண மந்திரம் :
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
6 hours ago
8 hours ago