Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜூலை 22 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பை கடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி திங்கட்கிழமை (22) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறித்த காணிகளை அந்தோனியார் புரம் மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்களாக மன்னார் மாவட்டத்தை சேராத வவுனியா மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளை பண்படுத்தும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான காணியை தாங்கள் பூர்விகமாக பயன்படுத்திய காணியை தங்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர்களிடமும் பணம் படைத் தவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு காணி சீர்திருத்த ஆணைக் குழுவினர் அவர்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது,
எஸ்.ஆர்.லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago