2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

காசநோய் விழிப்புணர்வு நடைபவனி

Janu   / 2025 மார்ச் 25 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி. சகாதேவராஜா

உலக காச நோய் தினத்தையொட்டி கல்முனை  ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இணைந்து , விழிப்புணர்வு நடைபவனியொன்றை திங்கட்கிழமை (24) அன்று முன்னெடுத்தனர்.

 இந்நிகழ்வானது கல்முனை ஆதார வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன்  தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நடைபவனியானது கல்முனை  ஆதார வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதி ஊடாக கல்முனை பொதுச் சந்தையை அடைந்து அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றன.

கல்முனை  ஆதரவைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவில் காசநோய்க்கான சளி பரிசோதனை 2% மாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வின் இதில் போது கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ந. ரமேஷ்  உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், நிர்வாக கிளையினர், சுகாதார உதவியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஊழியர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X