2025 மார்ச் 13, வியாழக்கிழமை

கவனயீர்ப்பு பேரணி

Janu   / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் வியாழக்கிழமை (24 )முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் மல்லிகைத்தீவில் இயங்கிவரும் சிறுவர்களின் போசாக்கு அபிவித்தி நிலையம்  ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரசேத சபை முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும்  மல்லிகைத்தீவு பகுதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் புதுக்குடியிருப்பு சந்தியினை சென்றடைந்து அங்கிருந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியவாறு  பிரதேச செயலம் சென்றடைந்து அங்கு சிறுவர்களின்  பாதுகாப்பினை உறுதி செய்யகோரியான கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இதில் சுமார் 500 வரையான சிறுவர்கள் பெரியவர்கள் வரை கலந்து கொண்டுள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .