2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

கலைநிகழ்வுகள்...

Janu   / 2024 ஜூலை 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கின் அகல் இளையோர் மற்றும் விழுது நிறுவனம் இணைந்து நடாத்தும் "ஓரங்கட்டப்பட்டு மருவி கலைஞர்களின் வெளிக்கொணர்வதற்கான கலை நிகழ்வும்,  உரையாடல்களும் மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்  கற்கை நிறுவகத்தில் விழுது நிகழ்ச்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிகரதா மோதரன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம்,  பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

விழுது அமைப்பின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பாலசிங்கம் முரளிதரனின் வரவேற்புடன் ஆரம்பமான இவ்நிகழ்ச்சியில் கிழக்கின் அகல் இளைஞர் குழுவினரின் இரு தசாப்த கால பயணம், மறுமலர்ச்சி நாட்டுக்கூத்து படைப்பு, ஓரங்கட்டப்பட்டு மருவிவரும் கலைஞர்களின் சவால்களும் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் என்னும் தலைப்புக்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நாட்டார் பாடல்கள், பாறை இசை, ஆதிவாசிகளின் பாரம்பரிய கலை படைப்புக்களும் நடைபெற்றது

எம்.எப்.றிபாஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X