Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஜூலை 04 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களின் நலம் விசாரித்தன் பின்னர் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார். பின்னர் ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹராவின் இறுதி நாளான நேற்று பெரஹராவை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கந்துல ஹஸ்தி ராஜாவின் மீது தாது கலசத்தை ஸ்தாபித்தார். அதன் பின்னர் இறுதி பெரஹராவை பார்வையிட்ட ஜனாதிபதி, கதிர்காமம் சமன் தேவாலயத்திற்கும் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
கதிர்காமம் வருடாந்த எசல மகா பெரஹராவை பார்வையிட விகாரைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கதிர்காமம் மகா தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே, இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹரன்போல்(Poj Harnpol), கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ, உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
4 hours ago
5 hours ago