2024 நவம்பர் 02, சனிக்கிழமை

ஓவியக் கண்காட்சி...

Freelancer   / 2023 பெப்ரவரி 24 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

“இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” எனும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி, யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்று (24) காலை ஆரம்பமாகியது. 

இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. 

“இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது  பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்” என்னும் தலைப்பில் ஓவியப்போட்டி கடந்த வருடம் நடைபெற்றது. 

இதற்காக இலங்கை முழுவதும் உள்ள ஓவியர்களிடமிருந்து பொருளாதார நெருக்கடியின் போதான வன்முறைகள், உணவுப் பற்றாக்குறை, வறுமை, போக்குவரத்துச் சிரமங்கள், அதிகரித்த வேலையின்மை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவம், விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்டம், வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை மற்றும் உள்ளூர் நிர்வாகம்  போன்ற உப தலைப்புக்களில்  வரையப்பட்ட சமார் 1,925 ஒவியங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. 

ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற ஓவியங்களுக்கான பரிசில்கள், எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 2 மணிக்கு வழங்கப்படவுள்ளன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .