Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Janu / 2024 டிசெம்பர் 04 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்று, டிசெம்பர் 04ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மற்றும் முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
1974 டிசம்பர் 4, அன்று, மார்ட்டின் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான DC 08 விமானம் இந்தோனேசியாவின் சுரவேயார் விமான நிலையத்திலிருந்து மக்காவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இரவு 10:10 மணியளவில், நோட்டன் பிரிட்ஜ் ஏழு கன்னியர் மலை உச்சியில் மோதியதில் அதில் பயணித்த 182 பேர் மற்றும் 09 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தின் ஒரு டயர் நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பகுதியில் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் இதன் போது நினைவிடம் முன் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி , இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago