2025 மார்ச் 13, வியாழக்கிழமை

ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி போராட்டம்

Editorial   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி  பூநகரி வேரவில் இந்து மகா வித்தியாலயத்தின் ஆரம்ப கல்வி பிரிவிற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்களால் இன்று (07) பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி கல்விக்கோட்டத்தின் கீழ் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பாடசாலையான வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்விப் பிரிவுக்கான போதிய  ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையினால், தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குறித்த பாடசாலைக்கு  ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி காலை 07 மணிமுதல் பாடசாலையின் நுழைவாயிலை மூடி  பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 12 வரையான வகுப்புக்களில் 270 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன்; 18 ஆசிரியர்கள் நிரந்தரமாகநியமிக்கப்பட்டுள்ளனர்

04 ஆசிரியர்கள்  ஏனைய அயற் பாடசாலைகளின் இணைப்பு ஆசிரியர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

குறித்தபோராட்டம்ஜெயபுரம்பெலிசார்  கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் கி.கமலராஜன்  மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் ஆசிரியரை நியமிக்கும் வரை தாங்கள் போராட்டத்தைமுன்னெடுக்கப் போவதாகவும் இதே நேரம் குறித்த பாடசாலைகளுக்கான பாடசாலை ஆரம்ப பிரிவுக்கு ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யது பாஸ்கரன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .