2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியருக்கு பிரியாவிடை ...

Editorial   / 2024 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை அல் அர்ஹம்  வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெறும் ஏ. சீ. எஹியாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் ஏ. எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் ​புதன்கிழமை (28) நடைபெற்றது.

"விடைபெறும் வித்தகர் சேவை நாலன்  பாராட்டு விழா" எனும் தொனிப் பொருளில் பாடசாலையின் திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம். எச்.றஸ்மி பிரதம அதிதியாகவும், ஓய்வு பெற்ற அதிபர் கே.எல்.ஏ.சமது, அதிபர்களான எஸ். எம். சாஹிர் ஹுசைன், எம். எச்.எம.உவைஸ், ஏனைய பாடசாலைகளின் அதிபர்களான எம். ஏ. சீ. அன்சார், ஏ.ஜீ. ஏ. சமூர், எம். எம். அஹ்சாத், எஸ். எம். றகீம், ஏ.ஆர்.ஜப்ராஸ்,ஏ.அஸ்மி,எம்.எஸ்.பாஹிம்,ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,பாடசாலையினா அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பழைய மாணவர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் சேவையில் சுமார் 32 வருடங்களாக  சேவையாற்றிய எஹியா ஆசிரியரின் சேவையினை பாராட்டி கலந்து கொண்ட அதிதிகளினால் பொன்னாடை போத்தி, நினைவு சின்னங்களளும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

எம்.எப்.றிபாஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X