Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 13, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பெரு நிலப்பரப்பின் போரதீவுப்பற்றப் பிரதேசத்தில் தற்போது பெரும்போக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வயல் நிலங்களில் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இதற்கமைய, கொக்கு, மைனா, நாரைக்கொக்கு, ஆள்காட்டி, உள்ளிட்ட பல பறவைகளுடன் இணைந்து கூட்டம், கூட்டமாக வயல் நிலங்களில் இரை தேடி வருவதையும், அவதானிக்க முடிகின்றது.
குறித்த பறவைகள் பல வர்ணங்களுடன் பார்ப்பதங்கு அழகாகக் காட்சி தரும் அழகையும் அப்பகுதி மக்கள் கண்டு இரசித்து வருகின்றனர்.
பூகோள ரீதியில் வட துருவத்திலிருந்துதான் அதிக பறவைகள் வருகின்றன. இதனை இடம்பெயரும் பறவைகள் என அழைப்பதில்லை அதனை “வலசை வரும் பறவைகள்” என அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு பறவைகள் மாத்திரமல்ல வண்ணாதிப்பூச்சி, சிங்கறால், திமிங்கலம், நீலத்திமிங்கலம், உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களும் வருகின்றன.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago