Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 மே 03 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 600 பேருக்கு ஏற்றக்கூடிய கொவிட் தடுப்பூசி மருந்து, அநியாயமாக வீணாகி போன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகளின் அசமந்த போக்கினால், வீணாகிப்போன அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை சனிக்கிழமை (01) இடம்பெற்றது.
அச்செயற்பாடு, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதில், மருந்து நிரப்பப்பட்ட 57 குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், வெளியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை காலையில், ஏனையோருக்கு தடுப்பூசி எற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், 4 பாகை தொடக்கம் 8 பாகை வெப்பத்தில், குளிர்தானப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வெளியிலேயே இருந்துள்ளன.
கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேல் வெளியில் வைக்கப்பட்டுள்ளதை கண்டனர். இதனால் இந்த தடுப்பூசி மருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
ஒரு மருந்து குப்பியிலுள்ள மருந்து, 10 பேருக்கு ஏற்ற முடியும். அங்கு சுமார் 57 மருந்து குப்பிகள் வீணாகியுள்ளன. இதனால், சுமார் 600 பேருக்கு ஏற்றக்கூடிய மருந்து குப்பிகள் வீணாகி போகியுள்ளன.
இந்த அசமந்த போக்கினால் வீணாகிபோன, கொரோனா தடுப்புமருந்து குப்பிகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
38 minute ago
49 minute ago