2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

30 ஆம் திகதிக்குப் பின்னர் நடப்பது என்ன? சுகாதார அமைச்சர் அதிரடி பதில்

Editorial   / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஓகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ​அறிவித்துள்ளார்.  

 “பலரின் பரிந்துரைகளை பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக, முடக்கத்துடன் முன்னேறுவது சாத்தியமில்லை, அவர் சுட்டிக்காட்டினார். முடக்குவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு நாடும் தனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்று அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.

 நாடு கடந்த சில நாள்களில் 4000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.  நாளொன்றுக்கு குறைந்தது 200 இறப்புகளும் நிகழ்ந்தன. இந்நிலையிலேயே நாடு தழுவிய முடக்கம் 10 நாள்களக்கு அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதைத் தடுக்க தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க வேண்டுமென அரசாங்கம்,  எதிர்க்கட்சி மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பல நபர்கள், அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X