Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்ற
"2010 மற்றும் 2015 க்கு இடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன்" எனத் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை பாராளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் என்றார்.
இதன்போது கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, பதாதைகளை எதிரணியினர் ஏந்தியிருந்தனர். அத்துடன், கைகளிலும் கறுப்பு பட்டிகளை அணிந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
24 minute ago