Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 மே 13 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்னவின் கேள்விக்கு பதிலளித்த அவர், வினாத்தாளின் பல கேள்விகளிலும் பல் தேர்வு வினாத்தாளிலும் (MCQ) சிக்கல்கள் பதிவாகியுள்ளன என்றும், வினாத்தாள் தயாரிப்பாளர்கள் கூடி சம்பவம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆங்கில வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு இது நியாயமற்றது என்றும் எம்.பி.கவிரத்ன தெரிவித்தார்.
மாணவர்களுக்கு எந்த வித அநீதியும் ஏற்படாத வகையில், வழக்கமான மாதிரி தயாரித்த பிறகு மதிப்பெண் திட்டத்தை தயாரிக்கும் போது, இந்த விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago