Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தாமல் பண்டிகை காலங்களில் செயற்பட்டால் வருட இறுதியில் நாட்டில் கொரோனா சுனாமியொன்றே ஏற்படலாம் என மருந்துகள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு பயணங்களை மேற்கொள்வதற்கு முடிவெடுத்திருப்பார்கள்.
அவ்வாறான பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பதாக கொரோனா மூன்றாவது தடுப்பூசியை கண்டிப்பாக பெற்றுக்கொள்வது சிறந்தது.
மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லல், பயணங்களை மேற்கொள்ளல் உள்ளிட்ட செயற்பாடுகள் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றும், அதற்கிணங்க வருட இறுதியில் நாட்டில் கொவிட் சுனாமியொன்று உருவாகக்கூடிய அபாயநிலையே ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் களியாட்டங்களை மேற்கொள்ள முயற்சித்தால் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலை மேலும் மோசமடையுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago