Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 நவம்பர் 02 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க,
“வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளன.
“இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை மீறுவதாகவும், அத்துடன், பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தெரிவித்தார்.
வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை கண்டியில் உள்ள ஹோட்டல்கள் என்று கூறப்படுகிறது.
வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது என்பது சம்பந்தப்பட்டவரின் கவுன்சிலர் பதவியை உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்று, கண்காணிப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.(AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago