Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 22 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
யார் மீதும் சேறு பூசும் தேவைப்பாடு எங்களுக்கு இல்லை,உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தும் தேவைப்பாடே எமக்குள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெள்ளிக்கிழமை (22) தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும்,அது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட சமூகம் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேரணையாக இந்த விவாதம் முன்வைக்கப்பட்டது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவறுக்கும் சேறு பூசவோ அவமதிக்கவோ அல்லவெனவும், இதன் முக்கிய நோக்கமும் குறிக்கோளும் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செனல் 4 வில் வெளியான திரைபடம் ஒன்றினால்தான் இது பேசு பொருளாகியதாக ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் கூறினாலும் அவ்வாறு சொல்பவர்கள் இது சம்பந்தமாக எந்த யோசனையும் இல்லாத தூக்கத்தில் இருக்கும் எம்.பி.க்களே என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் உண்மை மற்றும் இதன் பிரதான சூத்திரதாரிகள் குறித்து முழு நாடும் விழிப்புடன் இருந்து வருவதாகவும், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் விழிப்புடன் இருந்து பேசி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்க குடியரசு 2011செப்டம்பர் 11 அன்று நடந்த தாக்குதல் குறித்து ஓர் ஆணைக்குழு அறிக்கையை தயார் செய்தாலும்,எதிர்க்கட்சித் தலைவராக தான் அமெரிக்கக் குடிமகன் இல்லை என்றாலும் அந்த அறிக்கை தற்போது தம் வசம் உள்ளது என்றார்.
இலங்கைப் போன்று பொய்யான நிபந்தனைகளை முன்வைத்து அறிக்கைகளை மறைக்கவில்லை என்றும், பாரபட்சமற்ற விசாரணையை முன்னெடுத்ததாகவும்,கட்சி பேதமின்றி அவர்கள் ஆணைக்குழுவில் பணியாற்றியதால் உண்மையை கண்டறிய முடிந்ததாகவும், நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
9/11 தாக்குதலில் இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொண்டாலும்,நம் நாட்டு தலைவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago