2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

யாருக்கு ஆதரவு: அறிவித்தார் மஹிந்த

Editorial   / 2024 ஜூலை 28 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரிக்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல் குழு கூடி இந்த முடிவை எடுக்கும் என்றார்.

 ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்தால், அதியுச்ச ஆதரவு அளிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வேறு வேட்பாளரை நியமிக்க கட்சி முடிவு செய்தால், அதற்கும் ஆதரவு அளிக்கும் என்றார்.

கட்சியின் சில எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும்,   அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X