Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
R.Maheshwary / 2021 மார்ச் 16 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிக்காப்பைத் தடை செய்வதை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தால், சாதாரண இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்படுவர் என பாகிஸ்தான் அச்சப்படுகிறது.
இலங்கையில் நிக்காப்புக்கான எதிர்பார்க்கப்படும் தடையானது, சாதாரண இலங்கை முஸ்லிம்கள், பூகோளம் முழுவதுமுள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு காயமாகவே அமையும் என இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜனர் ஜெனரல் சாட் கஹட்டக் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக, பொருளாதார ரீதியில் கடினமான இக்காலத்தில், சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்கொள்ளும் கடினமான நேரங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளால், பொருளாதார கடின நிலைமைகளுக்கு அப்பால், இலங்கையில் சிறுபான்மையினங்கள் குறித்து அடிப்படை மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்துமென கஹட்டக், தன்னுடைய டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
புர்கா மட்டுமல்லாமல், நிக்காப்பையும் இலங்கை தடை செய்யவுள்ளதாக, பொதுப்பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, தெரிவித்துள்ளார்.
நிக்காப், புர்கா இரண்டு உள்ளடங்கலாக முகத்தை மறைக்கும் அடையாளங்களை அணிவதை தடை செய்வதற்கான அனுமதிக்கான, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
கண்களைத் தவிர முகத்தை மூடுவது நிக்காப் ஆகும் என்பதுடன், புர்காவானது முழு முகத்தையும் மூடுவது ஆகும்.
இதேவேளை, ஹிஜாப்பானது முகத்தை வெளிப்படுத்துகின்ற நிலையில், அது தடை செய்யப்படாதென வீரசேகர கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago