Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 மே 12 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் அறிவித்துள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தடை உத்தரவு, நேற்று (11) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அறிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்தத் தடையுத்தரவு, இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்குமென்றார்.
எவ்வாறெனினும், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு, இந்தத் தடையுத்தரவு தடங்கலாக இருக்காதென்றும் அவ்வாறு அத்தியாவசியச் சேவைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில், ஓரிரு நாள்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சேவையின் தேவைக்கேற்ப அழைக்கப்படும் அரச உத்தியோகஸ்தர்கள், மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க வேண்டுமாயின், நிறுவனப் பிரதானியின் அனுமதிபெற்ற கடிதமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டுக்குள் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மாவட்டங்களுக்கு இடையிலும் பயணத் தடை விதிக்க முடியுமெனக் குறிப்பிட்ட இராணுவத் தளபதி, இப்போதைக்கு, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்படி,
அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல்
மக்கள் ஒன்றுகூடும் அனைத்துக் கூட்டங்களையும் இரத்துச் செய்தல்,
வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசித்தல், தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தல்
தொற்றாளர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளைத் தனிமைப்படுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்றும், ஜெனரல் ஷவேந்தி தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்தப் பயணத்தடை தீர்மானம் காரணமாக, இம்மாதம் 30ஆம் திகதி வரையில், மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துச் சேவையை, இலங்கைப் போக்குவரத்துச் சபையும் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
37 minute ago