2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’மனித உரிமைகள் மதிப்பு, அமைதி, நல்லிணக்கத்தில் தங்கியுள்ளது’

R.Maheshwary   / 2021 மார்ச் 25 , மு.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கையின் நீண்டகாலப் பாதுகாப்பும் செழிப்பும், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் எதிர்காலத்துக்கான அமைதி, நல்லிணக்கத்துக்கு உறுதியளிப்பதைப் பொறுத்தது என, அமெரிக்கா அறிவித்துள்ளது.

இன மற்றும் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க, அமெரிக்க வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தையே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றியதாக, அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் முதன்மைத் துணைச் செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், இலங்கை தொடர்பான தீர்மானத்தை, அமெரிக்கா இணைந்து வழங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து, இன மற்றும் மத சிறுபான்மையினர், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அதன் கடந்த காலத்தை நிவர்த்தி செய்ய நம்பகமானதும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளை எடுக்கவும், இலங்கைக்கு அழைப்பு விடுப்பதாகத்  தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானம், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கான அறிக்கையிடல் தேவைகளை விரிவுபடுத்துவதாகவும் எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதற்கான ஆணையை உள்ளடக்கியதாகவும், கடந்த ஆண்டுகளின் போக்குகள் குறித்த கவலையை வெளிப்படுத்துவதாகவும், ஜலினா போர்ட்டர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .