Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஜூன் 14 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சிலர், தனியான சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில பதவிவிலக வேண்டும் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான சாகர காரியவம் எம்.பி வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் பங்காளி கட்சிகளின் தலைவர் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம், அமைச்சர் கம்மன்பிலவின் தனித் தீர்மானம் அல்ல, அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பொதுத் தீர்மானம் ஆகும். ஆகையால், அமைச்சர் கம்மன்பிலவுக்காக குரல்கொடுப்பதற்கு, அக்கூடத்தில் பங்கேற்றிருந்த பங்காளி கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு அதிருப்தியை வெளியிட்டு அறிக்கையொன்றை வெளியிடவும் இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழ்மையான மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்குவதற்கும் இக்கட்சித் தலைவர்கள் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அத்துரலிய ரத்ன தேரர், வாசுதேவ நாணயக்கார, டிரான் அலஸ், உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
அதுமட்டுமன்றி, வாழ்க்கைச் செலவு தொடர்பிலான அமைச்சரவை உப-குழுவின் உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
30 minute ago
41 minute ago