2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நீர்த்தேக்கத்தில் பாய்ந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 12 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம் இன்று(12) காலை மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்விகற்கும் இந்த மாணவி, இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

பின்னர், நீர்த்தேக்கத்துக்கு சென்று அங்கிருந்து குதித்தை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளுக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .