Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Nirosh / 2021 ஜனவரி 16 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாட்டோவின் உரைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் வழங்கிய விதம் மிகவும் தவறானதென பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஹரின் பெர்ணான்டோ நாட்டின் நிலைமைகள் தொடர்பில் பேசியிருந்தாரென தெரிவித்த அவர், அதுத் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகக் கூறியிருக்க வேண்டுமெனவும், அதனைவிடுத்து ஜனாதிபதி அச்சுறுத்தும் வகையில் பதில் வழங்கியுள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.
“ஜனநாயகரீதியாக மனிதாபிமானரீதியாகவும் செயற்பட வேண்டிய ஜனாதிபதி, ஏகாதிபத்தியவாதியாகவும், பசிஸ்ட்வாதியாகவும் செயற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்புக்காக பாராளுமன்ற உறுப்புரிமையை இழப்பார் என்ற விடயத்தில், அரசியலைமைப்பில் தெளிவான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று சட்டத்தரணிகள் கூறுகின்றனர். எனவே பாராளுமன்ற வரப்பிரசாதங்களின் பிரகாரம், பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.“ எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago