Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 09 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவினால் எவரேனும் உறுப்பினர் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையொன்றில், வெவ்வேறான இரண்டு தவறுகள் அல்லது அதிலும்கூடிய ஒரு எண்ணிக்கைக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் வெவ்வேறாக குறிப்பிடப்பட்டுள்ளபோது, அத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர் அத்தகைய குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக காணப்பட்டுள்ளவிடத்து,
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 28ஆம் பிரிவுக்கு அமைய, விதிக்கப்படக்கூடிய அதியுச்ச தண்டனை பற்றி சட்டத்துறை தலைமை அதிபதியின் அபிப்பிராயம் வினவப்பட்டது.
அதன்படி, சட்டத்துறை தலைமை அதிபதி அரசியலமைப்பின் 66(ஊ) மற்றும் 67ஆம் உறுப்புரைகள், காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 1953 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 22(3), 27 (1) மற்றும் 32ஆம் பிரிவுகள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 77(1), 77(2) மற்றும் 77(3) அத்துடன் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தின் 5 மற்றும் 16 (1) ஆம் பிரிவுகளைக் கருத்திற் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 66(ஊ) உறுப்புரையின் கீழ், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தின் 5 மற்றும் 16 (1) ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளைப் பின்பற்றி தண்டனை விதிக்கப்படலாமென அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிகழ்வு ஒன்றுக்காக குற்றப்பத்திரிகையில் வெவ்வேறான இரண்டு தவறுகள் அல்லது அதிலும் கூடிய ஒரு எண்ணிக்கைக்கு, உறுப்பினர் ஒருவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் 28 ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சேவை இடைநிறுத்தமானது ஒரு மாதத்தை விஞ்சிய ஒரு காலப்பகுதிக்காக, அரசியலமைப்பின் 66(ஊ) உறுப்புரைக்கு அமைய மூன்று மாதகால உச்ச வரம்பிற்கு உட்பட்டதாக விதிக்கப்படலாமென அவதானிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அவேர்தன அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago