Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 14 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என சஹரான்கள் அறிந்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து சஹரான்கள் மரணமடைந்திருப்பர் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.
மக்களின் ஊழியர் சேமலாப நிதி ( EPF) ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை கொள்ளையடித்து, நிதி நிறுவனங்களை ஆபத்தில் ஆழ்த்தி, தேசிய வளங்களை ஏலம் விட்டு, மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் கினிகத்தேன கூட்டுறவு கூட்ட மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே சுனில் ஹதுன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் பிரச்சினை தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, சஜித் பிரேமதாசவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, பாராளுமன்றத்தில் உள்ள எமது தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை தவிர, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
தொலைக்காட்சியில் வரும் போது மைத்திரிபாலவின் பகிடிகளை பாருங்கள், அவர் தனது கட்சியின் பிரச்சினைகளை மட்டுமே பேசுகிறார், நாட்டின் பொருளாதாரம், உணவுப் பிரச்சினை, மருந்துப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்றார்.
இந்நாட்களில் சனல் 4 காணொளியை தவிர மற்ற சனல்கள் மூடப்படுகின்றன, பொருட்களின் விலைக்கு சனல் இல்லை, எரிபொருளுக்கு சனல் இல்லை, பஸ் கட்டணத்திற்கு சனல் இல்லை, மக்கள் பிரச்சனைகளை எந்த சனல்களும் பேசுவதில்லை, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி பேசுவதில்லை என்றும் குறிப்பட்டார்.
சனல் 4வை பிடித்துக்குக் கொண்டு அரசியல் ரீதியாக தொங்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு நாமல் ராஜபக்ஷவிடம் நல்ல பதில்கள் உள்ளன, கோட்டாபய ராஜபக்ஷவை பதவிக்கு கொண்டு வர யாராவது தற்கொலை செய்து கொள்வார்களா என்று கேட்கின்றார்.
தங்களுடைய மரணங்களால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவார் என்று மரணித்த சஹரான்களுக்கு தெரிந்திருந்தால், தாங்கள் மட்டும் சாக மாட்டோம், கோட்டாபய ராஜபக்ஷவை கட்டிப்பிடித்து மரணித்து இருப்பார்கள் என தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் நாட்டு நலனுக்காக இறக்கிறார்கள் என்றால் அதுதான் அரசியல் தந்திரங்கள், அரசியல் விளையாட்டுகள் என்று பழமையானவர்கள் கூறுகின்றனர்.
இது இவ்வளவு கேவலமான நாடு, பதவிக்கு வருவதற்கு இன பேதங்களை உருவாக்கி, கேவலமான அரசியல் செய்கின்றனர். குறைந்த பட்சம் அவர்களுக்கு வருத்தம் இல்லை, வெட்கம் இல்லை, மனசாட்சி இல்லை,
"இந்த நாடு செல்லும் வழியை நிறுத்த வேண்டுமா இல்லையா? என்று கேட்பவர்கள் முதலில் இந்த அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும்" என்கின்றனர் என்றும் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago