2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் சிக்கின

Simrith   / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கலவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

“பொல்கொடுவே கடா” என்றழைக்கப்படும் செல்வந்த வாகன வர்த்தகர் ஒருவர் போலியான சேசிஸ் மற்றும் என்ஜின் எண்கள் உள்ளிட்ட மோசடியான ஆவணங்களுடன் வாகனங்களை விற்பனை செய்யும் சட்டவிரோத வியாபாரத்தை நடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, ​​வாகனங்கள் சாதுர்யமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சுற்றிவளைப்பின் போது பீதியடைந்த சந்தேக நபர் மயக்கமடைந்து இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .