2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொவிட் மரணங்களால் கிளர்ந்தெழுந்த பிக்குகள்

S. Shivany   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் அனைத்து நபர்களின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு வலியுறுத்தி, தேசிய பிக்குகள் அமைப்பு ஜனாதிபதி செயலகம் முன்பாக,  இன்று(28) பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.

இதன்போது இது தொடர்பான மகஜர் ஒன்றும் சுகாதார அமைச்சரிடம் குறித்த அமைப்பு கையளித்திருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பிக்குகள் அமைப்பு, சிங்ஹள ராவய, சிங்ஹள அபி, சிங்கள மற்றும் பௌத்த தகவல் கேந்திர நிலையம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றிருந்தன.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும்  முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் இடமளிக்க கூடாதென, மேற்படி அமைப்பினர் வலியுறுத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .