Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 09 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுவதால், வடக்கில், தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுவோரின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தஅரசாங்கம் மக்களை கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்கின்றது என்றார்.
“கொரோனா வைரஸ், பரவுவதற்கு ஆரம்பித்த வேளையிலேயே நாட்டை முழுமையாக முடக்குமாறு வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தினர். எதிரணியின் அரசியல் தலைவரும் மதத் தலைவர்களும் வலியுறுத்தினர்.அவற்றுக்கு செவி சாய்த்திருந்தால், இவ்வாறு எல்லை மீறியிருக்காது” என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்ற, சபையமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலைமைகள் எல்லை மீறிய பின்னர் வாராவாரம்
பயணக்கட்டுப்பாட்டை நீடிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோற்றுவிட்டது என்றார்.
நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை திசைதிருப்பிவிடும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மண்சரிவு உட்பட்ட இயற்கை அனர்த்தங்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உணவுகள், அடிப்படை வசதிகள் செய்யப்படாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆபத்தான விடயமாகும் என்றார்.
“ஊரடங்கு இல்லாத ஒரு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்போது செல்வந்தர்களுக்கு எந்தத் தடையும் இல்லாது அப்பாவி மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். தமது நாளாந்த உணவுத்தேவைகளை தேடிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினாலும் அதில் மூவாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவை கழித்துக்கொண்டு இரண்டாயிரம கிடைக்கின்றது. பல பேருக்கு நிவாரண பணம் கிடைக்கவில்லை.
இதில் சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும் கூட அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செய்ய வேண்டிய
பணிகளை அரசியல் வாதிகளும், இராணுவமும் ஏன் செய்ய வேண்டும்
எனக் கேள்வியெழுப்பிய அவர், எந்தவொரு நாட்டிலும் இல்லாத
நிலையொன்று இங்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
“இந்த நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகின்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தி வருகின்றது. நோயை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. எனவே, மக்கள் பட்டினி சாவில் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
“மக்களுக்கு உணவு கிடைக்கும் வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். சட்டமும் கட்டுப்பாடுகளும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. ஆகவே, இந்த அரசாங்கம் தோற்றுப்போன நிலையில் மக்களை கொலைக்களத்திற்குள் இழுத்து செல்கின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago