Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இன்று (22) இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், குப்பி விளக்கு வெளிச்சத்தில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களின் பிள்ளைகள் மண்ணெண்ணெய் விளக்குகளில் கல்விக்கற்க வேண்டும் என்று, இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த, ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில், வியாழக்கிழமை (21) கேள்வியெழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன,
பெருந்தோட்ட பிள்ளைகளின் படிப்பு தொடர்பில் மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் ஆராய்ந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து தோட்டத் தொழிலாளர் தலைவர்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தீங்கு விளைவிக்காது அல்லது அவமதிக்காது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையின் உண்மை மற்றும் பொய்யின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர், இந்த விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.
பில் கட்ட முடியாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், குழந்தைகள் படிக்க பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கச் சென்ற தந்தையின் மரணம் குறித்து, கருத்து தெரிவித்திருந்த இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், அந்த பிள்ளைகள் குப்பி விளக்குகளில் படிக்கலாம். மேலும் தோட்டங்களில் உள்ள அப்பாக்கள் மாலையில் குடித்துவிட்டு செல்வார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago