2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இரு வாரங்களுக்கு முழுநாடும் முடக்கம்? இராணுவ தளபதி விளக்கம்

J.A. George   / 2021 மே 21 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .