2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’இரு கொள்கைகளில் ஐ.நா செயற்படுகிறது’

R.Maheshwary   / 2021 மார்ச் 23 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை, அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகுமெனத் தெரிவித்த கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இப்பிரேரணைகள் ஊடாகச் சாதாரண மக்களுக்கு நன்மைகள் எவையும் கிடைக்காது; மாறாக, புலம்பெயர் அமைப்புகள் மாத்திரம் குறுகிய பயனைப் பெறும் என்றார்.

அனைத்து நாடுகளுடனும்  பொதுத் தன்மையைப் பேணுவது,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கொள்கையாகும் எனத் தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை,  ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை அடிப்படையாகக் கொண்டு கொள்கை வகுக்கிறது.

இவ்வாறான செயற்பாடு, ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது என்றார். 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பெறுபேறு எதுவாக அமைந்தாலும், அரசாங்கம் சர்வதேசத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் இணக்கமாகவே செயற்படும். இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானது. சர்வதேசத்துக்கு அடிபணிந்து, இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக் கொடுக்கமாட்டோம். இராணுவத்தினரைப் பாதுகாக்க மேலதிகமாக சட்டம் இயற்றுவோம்' என்றார்.

'இலங்கை விவகாரத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், ஒரு தலைப்பட்சமாகச் செயற்பட்டு, இலங்கையின் உள்ளக விவகாரங்கள் தொடர்பில், வெறுக்கத்தக்க வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .