2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு

J.A. George   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான  ஜாகிர் ஹுசைன், கொல்கத்தா செல்வதற்காக நேற்றிரவு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் கடும் குழப்பம் ஏற்பட, அமைச்சருடன் வந்தவர்கள் அபயக் குரல் எழுப்பினர்.

வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர்  ஜாகிர் ஹுசைன் ஜாங்கிபுர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அவருடன் வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ உள்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து நிமிதா ரயில் நிலையத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். 

தாக்குதல் குறித்து மேற்கு வங்க பொலிஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

வெடிகுண்டு வீச்சுக்கு திரிணாமூல் காங்கிரஸின் அரசியல் எதிரிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான மலே கடாக் குற்றஞ்சாட்டி உள்ளார். 

இதனிடையே தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .