Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 மே 07 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.
கோவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்த டெட்ரோஸ், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதியிடம் கூறினார்.
முதல் கோவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார். இதன் போது உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறையும் கோவிட் வைரஸ் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு முடியும் என்று உலக சுகாதார தாபனம் நம்பிக்கை தெரிவித்தது.
இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “எஸ்ட்ராசெனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது. நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும். அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார தாபனம் உதவுமென தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
“சைனோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று டெட்ரோஸ் குறிப்பிட்டார். அந்த அனுமதியுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
உலக சுகாதார தாபனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
2 hours ago
3 hours ago