2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

காட்டு யானைகளின் தொல்லையால் விவசாயம் பாதிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ரமேஷ்    

குருணாகல் மாவட்டத்தில் மாகோ, நிக்கவரட்டிய, கல்கமுவ ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரட்சிக் காலம் ஆரம்பமாகியுள்ளதால் நீர்தேடி கிராமப் பகுதிகளுக்கு வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை அழித்து வருவதுடன் மக்களின் வீடுகளையும் உடைத்து வருகின்றன.

காலைவரை இவை கிராமங்களில் சுற்றித் திரிவதால் பாடசாலை செல்லும் மாணவர்களும், தொழிலுக்குச் செல்வோரும் பாதிப்படைந்துள்ளதுடன், ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.

நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படாமல் இருக்கும் மின்சார வேலித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே காட்டு யானைத் தாக்கத்திலிருந்து பாதுகாப்புக் கிடைப்பதுடன், விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கும் விவசாயிகள், தகுந்த நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் மேற்கொள்ள
வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அதிக யானைகள் கொல்லப்படும் பகுதியாக வடமேல் மாகாணம் திகழ்வதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X