2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

அக்குரஸ்ஸ பிரதேச சபைத்தலைவருக்கு பிணை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 05 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பராயமடையாத ஒரு பெண் பிள்ளையை பலாத்காரம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அக்குரஸ்ஸ பிரதேச சபைத்தலைவரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபா பிணையில் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான மஞ்சுளா பாலசூரியா, பராயம்வராத இந்த பிள்ளையை நன்னடத்தை பாதுகாப்பின் கீழ் தடுத்து வைத்திருப்பதாக தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையை அவரது பெற்றோரின் பாதுகாப்பில் விடுமாறு கேட்டுக்கொண்டார்.

பிள்ளை பாதுபாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய்துகொண்டு பிள்ளையை ஏப்ரல் 12 ஆம் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி விக்ரமசிங்க மாத்தறை நன்னத்தை அதிகாரிகளுக்கு பணித்தார்.

சந்தேகநபர் இந்த பெண்பிள்ளையை 2012 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதிக்கும்  ஜுன் 02 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்திற்குள் பலாத்காரம் செய்தார் என வழக்கில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X