2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

சட்டத்தரணி மீது எம்.பி தாக்குதல்: எம்.பி மறுப்பு

Kanagaraj   / 2013 மார்ச் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் பீ.டி சில்வா மற்றுமொரு சட்டத்தரணி மற்றும் அமைச்சின் பாதுகாப்பு பிரிவினர் தன்மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக சட்டத்தரணியொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

சட்டத்தரணி துஷார என்பவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் அவர் தற்போது கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

காலி ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டபோது, தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும் குறித்த சட்டத்தரணியை சுற்றி பலர் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X