2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு எதிராக வழக்கு?

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக திம்பிரிகஸ்யாய பிரதேசத்தைச் சேர்ந்த சரத் சுபசிங்க என்ற பொதுமகன் ஒருவர் அறிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு தரம் குறைந்த கார்பட் போடப்பட்டுள்ளதால் அந்நெடுஞ்சாலையினூடான பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்க முடியாதுள்ளது எனக்கூறியே தான் இந்த வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி நபருடைய கார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் வைத்து விபத்துக்கு உள்ளாகியதாகவும் விபத்துக்குள்ளான காரை திருத்துவதற்காக தான் ஒன்றரை இலட்சம் ரூபாவை செலவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நெடுஞ்சாலையில் இடத்துக்கிடம் நீர் தேங்கி நிற்பதோடு சில இடங்களில் போடப்பட்டுள்ள தார், குவியலாகவும் காணப்படுகிறது. இந்த நெடுஞ்சாலைக்கு இடப்பட்டுள்ள கார்பட் மிகவும் தரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது என்று சரத் சுபசிங்க மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அதிகாரசபையின் தலைவர் மற்றும் முகாமையாளர், 'இந்த நெடுஞ்சாலை ஜப்பான் தொழில்நுட்பத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதனால் உரிய தரத்துடன் இவ்வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனால், சரத் சுபசிங்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார். (பிமல் ஜயசிங்க)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X