2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

Super User   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

மற்றுமொருவருக்காக கொரிய மொழி பரீட்சையில் தோற்றிய அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் கொழும்பு பிரதான நீதவானினால் நேற்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி பரீட்சை நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொரிய மொழி பரீட்சையின் போது எதிரிவீர ஆராச்சி படவெட்டி காமினி என்பவருக்கு பதிலாக பிரதேச சபை உறுப்பினரான சமன் குருகுலசூரிய போலி பெயரில் தோற்றிய போதே கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது 50,000 ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் 4ஆம் நடைபெறும் என நீதவான் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X