2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

அக்குரஸ்ஸவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை: பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2012 மே 23 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ், கிரிஷான் ஜீவக ஜயருக்)

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, தெடியாகல  பகுதியில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ரி-56 துப்பாக்கிகளைப் போன்ற பகுதியளவில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பலகைத் தொழிற்சாலை என்ற போர்வையில் இந்த ஆயுத தயாரிப்பு நிலையம் இயங்கியுள்ளது.  இம்முற்றுகையின்போது ஒரு நபரை பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி துப்பாக்கிகள் தலா 50,000  முதல் 100,000 ரூபா விலையில் விற்கப்பட்டதாகவும் இவற்றில் பெரும்பாலானவை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எந்த தோட்டாவையும் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கிகளை தயாரிக்கும் ஆற்றலை 40 வயதான மேற்படி சந்தேக நபர் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கிகளை வாங்கிய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • mohamed zaki Wednesday, 23 May 2012 05:10 PM

    இது அமெரிக்காவில் நடந்திருந்தால் அவருக்கு பென்டகனில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கும் இங்கே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X