2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாயிலில் கொள்ளை முயற்சி

Super User   / 2012 ஜனவரி 08 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின்  வாயிலில்  பெண் இலங்கை இராஜதந்திரியிடம் ஒரு கொள்ளைக் கோஷ்டியினர் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

பத்தேகம நகரிற்கு செல்லும் வாயிலை நோக்கி சென்ற போதே இந்த கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது.

திட்டமிட்ட அடிப்படையில் இந்த கொள்ளை முயற்சியில் சுமார் மூன்று அல்லது நான்கு பேர் ஈடுபட்டதாக இலங்கை இராஜதந்திரி, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த குழுவினர் வீதியின் நடுவில் மர குற்றியொன்றினை வைத்திருந்தனர். இதனையடுத்து வாகன வேகத்தை குறைத்த போது இரண்டு மனிதர்கள் வந்து வாகனத்தின் கண்ணாடியை தட்டினர் என அவர் குறிப்பிட்டார்.

சிறிய கார் என்பதால் தப்பிச் செல்ல முடிந்தது. இதனையடுத்து திரும்பி பார்த்த போது, இந்த குழுவில் மேலும் இரண்டு பேர் கோடாரி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் காணப்பட்டனர் என இலங்கை இராஜதந்திரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த கொள்ளை தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவிற்கு பத்தேகம பொலிஸ் நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. (SD&HF


You May Also Like

  Comments - 0

  • A Waakir Hussain Sunday, 08 January 2012 11:01 PM

    அபிவிருத்தி என்பது வெறும் பாதைகளில் மட்டுமல்ல இலங்கை மக்களின் நடத்தையிலும் வேண்டும்.

    Reply : 0       0

    kamil Azad Friday, 20 January 2012 09:56 PM

    பண்பட்ட சமூகத்தால் தான் அபிவிருத்தியின் பயன்களை அனுபவிக்கலாம். பாதைகளை செப்பனிடுவது போல மனித உள்ளங்களையும் செப்பனிட அரசாங்கம் திட்டமிட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X