Super User / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(டி.ஜி. சுகதபால)
காலியிலுள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னிலை வேகப்பந்துவீச்சாளர் லஷித் மாலிங்கவின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக திருடர்கள் குழுவொன்று புகுந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் அவ்வீட்டிலிருந்து 2000 ரூபாவை மாத்திரமே அவர்களால் திருட முடிந்துள்ளது.
காலி ரத்கம பிரதேசத்திலுள்ள இவ்வீடு தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அவ்வீட்டில் குளியலறையொன்றின் ஜன்னலுக்கூடாக நுழைந்த திருடர்கள் பின்னர் கூரைத் தகடொன்றை அகற்றிவிட்டு அறையொன்றுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரத்கம பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துகின்றனர். இப்பகுதியில் விசேட பொலிஸ் குழுவொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
bnuboo Sunday, 11 September 2011 11:36 PM
பரவாயில்லை கொள்ளையடிக்க வந்த போக்குவரத்து செலவை கவர் பண்ண இவ்வளவாலும் கிடைத்ததே.
Reply : 0 0
Mubeen Monday, 12 September 2011 05:34 PM
மலிங்கவுக்கு இது தெரிஞ்சா அப்பாடா இதோட விட்டாங்களே! என்று சொல்லி இருப்பார்.
Reply : 0 0
mohamed ramees Monday, 12 September 2011 08:40 PM
malinga kalwanai pidiththirunthaal nippaatti vaithu panthinaal weesiyea kondiruppaar.
Reply : 0 0
Hot water Monday, 12 September 2011 08:40 PM
திருடர்களை நிற்க வைத்து அவர்களை நோக்கி மாலிங்கவை தன் பாணியில் பௌலிங் செய்ய சொன்னால் போதும்
Reply : 0 0
Rizlan Wednesday, 14 September 2011 10:53 PM
டை பூசிய தலைக்கு இது தேவையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025