Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 05 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிஷான் ஜீவக ஜயருக்)
க.பொ.த. உயர்தர பரீட்சை நிலையங்களில் ஒன்றான மாத்தறை, அக்குரஸ்ஸ தெலிஜவில ரோயல் கல்லூரியின் கட்டிடமொன்றில் 10 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அந்நடவடிக்கைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க உத்தரவிட்டார்.
இச் சந்தேக நபர்கள் ஐவரும் மது அருந்தியிருந்ததாக அக்குரஸ்ஸ வைத்தியசாலை மருத்துவர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை முன்னாள் வீரரான, கிரின்கொட கமகே புத்திக நுவன் குமார (30), பரீட்சை மேற்பார்வையாளர் பந்துல ஹோவாபத்திரண, பாடசாலையின் காவலாளியான இந்திக சுரங்க, அக்குரஸ்ஸ பொலிஸ் சார்ஜனான ஹல்லல்ல வெளிபிட்டிய சரத் ஹோவத்பதிரண, கான்ஸ்டபிள் கிரின்கொட கமகே பிரதீப் குமார (இவர் மேற்படி முன்னாள் விமானப்படை வீரரின் சகோதரர்) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் நான்கு சந்தேக நபர்கள் ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
மற்றொரு பாடசாலையின் அதிபரான வடுகே தர்மதிலக்க, பரீட்சை இணைப்பாளர் ரஞ்சித் குமார வெத்தசிங்க, பரீட்சை மேற்பார்வையாளர் ஏ. சந்திரசிறி மற்றும் அலுவலக உதவியாளர் சந்திரசிறி ஜாதுங்க ஆகிய நால்வருமே பிணையில் செல்ல அனுமதிக்ப்பட்டனர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முடிவுற்று மாணவர்கள் வெளியேறிய பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மேற்படி மாணவி, ஆசிரியர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கிணங்க, தனது தாய் மற்றும் தங்கையுடன் அவ்வேளையில் பாடசாலைக்கு வந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை பாடசாலை மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பமாகுவதால் அம்மாணவியின் சகோதரி கல்வி கற்கும் வகுப்பறையை சுத்தம் செய்வதற்காக இவர்கள் வந்திருந்தனர்.
தனது தாய் வகுப்பறையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அம்மாணவி தனது நண்பியுடன் பாடசாலையின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவ்வேளையில் மதுபோதையிலிருந்து பிரதான சந்தேக நபரான முன்னாள் விமானப்படை வீரர், மேற்படி சிறுமியை வகுப்பறையொன்றுக்கு அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சுயநினைவிழந்த சிறுமி, பிரதேச வாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள். மாத்தறை நகர பாடசாலையொன்றில் 5 ஆம் வகுப்பில் கல்வி கற்றும் மாணவியே இசம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளாள்.
இச்சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பரீட்சை நிலையத்தை முற்றுகையிட்டு, அங்குமதுபானம் அருந்திக்கொண்டிருந்த பரீட்சை நிலைய மேற்;பார்வையாளரையும் ஏனையோiயும் சுற்றிவளைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் வந்து சந்தேக நபர்களை கைது செய்தனர். (லங்கா தீப)
Jakkoo Monday, 05 September 2011 09:39 PM
இவர்களும் மன நோயாளிகளா? இந்த செயலுக்கு தகுந்த தண்டனை வழங்க பட வேண்டும்...
Reply : 0 0
xlntgson Monday, 05 September 2011 09:46 PM
காமச் சிறுவர்கள் பரீட்சை செய்து பார்த்திருப்பார்கள்!
Reply : 0 0
Akp.nimzard Monday, 05 September 2011 11:21 PM
நாய்கள். இனியாவது பெற்றோர் கவனமா இருக்கனும். படிப்பு முக்கியம். அத விட மானம் முக்கியம். கிறீஸை பற்றி கதைக்க விரும்பல.
Reply : 0 0
vaasahan Tuesday, 06 September 2011 01:45 AM
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு மரண தண்டனை வரும்வரை இந்தப் பாலியல் மனநோயாளிகள் தோன்றுவதை தடுக்க முடியாது.
Reply : 0 0
s.m Tuesday, 06 September 2011 02:34 AM
இவர்களுக்கு கொடுகின்ற தண்டனயபார்த்து இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இலங்கை திருநாட்டின் மானம் காப்போம் .
Reply : 0 0
Lankan Tuesday, 06 September 2011 05:07 AM
இவற்றுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு... இஸ்லாம் கூறும் தண்டனைகள் இலங்கையிலும் அமுல்படுத்தப்பட்டால் சவூதி அரேபியா போன்று இலங்கையிலும் குற்றச்செயல்கள் குறையும்...
Reply : 0 0
Manithan Tuesday, 06 September 2011 08:14 AM
நன்றி கூறுங்கள். போலீசார் பொதுமக்களை நல்லவேளை கைது செய்யவில்லை, ஒருவேளை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தால்.... ?
Reply : 0 0
shan Tuesday, 06 September 2011 08:59 AM
இவர்களுக்கு எந்த வக்கீலும் வாதிடக் கூடாது.
Reply : 0 0
ROSHAN Tuesday, 06 September 2011 05:00 PM
ஆம் இவர்களும் காம மனநோயாளியா? ....... முன்னாள் விமானப்படை வீரரே இப்படி என்றால் ....
Reply : 0 0
abdul gafoor Tuesday, 06 September 2011 08:43 PM
இவன்கள் உறவினருடன் பிறக்கவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
43 minute ago
48 minute ago