Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Super User / 2011 மே 31 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
"அனைத்து பிள்ளைகளையும் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவர்களுக்குள் பலவிதமான திறமைகள் உள்ளன. அவர்களின் தொழிற்பயிற்சி மற்றும் திறன்களை அபிவிருத்தி செய்வதற்காக அரச மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களோடு கைகோர்க்க வேண்டும்" என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அளுத்கம நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற கல்வி அபிவிருத்தி நிலையத்தினால் தொழிற் பயிற்சி பூர்த்தி செய்த பிள்ளைகளுக்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, கிரிக்கெட் அணியினை எடுத்தால் அதிலுள்ள எல்லா வீரர்களும் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் அல்ல. எல்லோருக்கும் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக முடியாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும தொடர்ந்து பேசுகையில், இரண்டாம் உலக யுத்தத்தின் போது சாம்பலாகி விட்ட ஜப்பான் நாடு தற்போது உலகத்தின் மிக உயர் நிலைக்கு வந்துள்ளது. அதற்குக் காரணம் அந்நாட்டின் பயிற்சி மற்றும் திறன்களை அபிவிருத்தி செய்வதே ஆகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
தனியார் துறையில் உள்ள தொழிற்பயிற்சிகளுக்காக அரசாங்கம் ஒத்துழைப்பு கொடுப்பதற்கு தயாராக உள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்வதில் அரசதுறை மற்றும் தனியார் துறை என்ற ஒரு பேதம் இல்லை. அரசதுறைக்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago