2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

எதிர்காலம் சீரழிந்தது எனக் கருதி இளைஞர், யுவதிகள் தற்கொலை செய்து கொண்ட யுகம் முடிந்துவிட்டது: அமைச்ச

Super User   / 2011 மே 13 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பெறுபேறுகள் வெளியாகியபின் எதிர்காலம் சீரழிந்தது எனக் கருதி இளைஞர், யுவதிகள் தற்கொலை செய்து கொண்ட யுகம் முடிந்துவிட்டது என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

மாத்தறை பெங்கமுவ வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின் போது இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை  (VTA) ஆகிய தொழிற்பயிற்சி நிறுவனங்களில் காட்சி அறைகளும் அமைந்திருந்தன.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில் 'தேசிய மட்டத்தில் நம் பாடசாலைத் துறையிலுள்ள ஒரு பிரச்சினைக்கான தீர்வை இந்த பெங்கமுவ வித்தியாலயம் கண்டு பிடித்துள்ளது. அது தொழிற் பயிற்சி அறிவினைக் கொடுப்பதே ஆகும்.

இலங்கையில் கல்வித்துறை, பல்கலைக்கழகத்திற்கு சேர்க்கப்படும் 5 சதவீதமானவர்களுக்காக ஏற்றவகையிலேயே உருவாகியுள்ளது .

இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய பயிலுநர், கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் உள்ளடங்கிய நிறுவனங்கள் மூலம் இந்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லாதுபோன 95 சதவீத இளைஞர், யுவதிகளுக்கு தேவையான பாதை இன்று உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல்வாதிகளுக்கு புரியாதிருந்த ஒரு பிரச்சினையை 1996 ஆம் ஆண்டில் அன்று தொழில் அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ கண்டு பிடித்தார். அவர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின் அந்தப் பிரச்சினைகளுக்காக தீர்வுகள் கொடுத்தார் .

க.பொ.த (சா.த), க.பொ.த (உ.த) பரீட்சைகளில் சித்தி பெற முடியாமல் போனவர்கள் நாட்டிற்கு ஒரு பாரம் இல்லை. இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கு சேர்ப்பதன் மூலம் தங்கள் எதிர்காலத்தை மிக வளமான எதிர்காலமாக அமைப்பதற்கு ஒரு சிறந்த பாதையாக உருவாகியுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X