Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மன்சூர்)
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் போது குறித்த பிரதேசங்களில் வாழும் எந்தவொரு தமிழ் பிரஜையும் சாட்சியமளிக்க முன்வரவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் காலி மாவட்டத்திற்கான அமர்வின் போது ஒரு முஸ்லிம் சாட்சியமளித்ததுடன் மற்றுமொரு முஸ்லிம் மகஜரொன்றை கையளித்தார்.
எனினும் மாத்தறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது எந்தவொரு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரஜையும் சாட்சிமளிக்கவோ மகஜர் கையளிக்கவோ இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்தறை மாவட்ட அமர்வை மாத்தறை மாவட்ட செயலகத்திலும் 19ஆம் திகதி சனிக்கிழமை காலி மாவட்ட அமர்வை காலி பழைய தேர்தல் செயலகத்திலும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
30 minute ago
41 minute ago