Super User / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருத்துவதற்காக சீனா நாட்டிலிருந்து இரண்டு பாரந்தூக்கிகளை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக துறைமுக அதிகார சபை தலைவர் பிரியந்த பி. விக்ரம தெரிவித்தார்.
இந்த பாரந்தூக்கிகளின் பெறுமதி சுமார் எட்டு மில்லியன் அமெரிக்க டொலர் தொடக்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வரையாகும்.
அடுத்த வருட பெப்ரவரி மாதமளவில் இந்த பாரந்தூக்கிகள் இலங்கையை வந்தடையும் என்றார் விக்ரம.
"உலகிலுள்ள பெரிய கப்பல் நிறுவனங்களுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். எண்ணெய் சேகரிப்பாதற்கான நிர்மாண பணிகள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளன. அதனையடுத்து எண்னெய் சேகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்" என விக்ரம கூறினார்.
கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025