2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இரத்தினக்கல் குழி இடிந்து 6 பேர் காயம் ; ஒருவரை காணவில்லை

Super User   / 2010 டிசெம்பர் 16 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரிந்த, புஹுல்வெல்ல பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுக் குழியொன்று இன்று மாலை இடிந்ததால் அங்கு பணியாற்றிய 6 பேர் மண்ணில் புதையுண்ட நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மற்றொருவர் காணாமல் போயுள்ளதால் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

30 அடி ஆழமான இக்குழியில் 7 இளைஞர்கள் மீதும் 5 அடி உயரத்திற்கு மண் இடிந்து வீழ்ந்தது.
4 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாரால் இவர்கள் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேற்படி இரத்தினக்கல் அகழ்வுக் குழியின் உரிமையாளர் ஆவார். (கிருஷான் ஜீவக ஜயருக்)
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X