Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 06 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு இந்த மாத இறுதியில் இரண்டாயிரம் காணி உறுதிகளை வழங்குவதற்க, காணி அபிவிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டம், பென்தொட்ட தோட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் துறை அமைச்சர் சந்ராணி பண்டார தலைமையில் இடம்பெற்ற இவ்விழாயில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கருணாதிலக்க மேலும் கூறுகையில்,
“பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீடுகள் அமைக்கப்பட்டும், இதுவரைகாலமும் காணியுறுதிகள் வழங்கப்படாதிருக்கின்றமை தொடர்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ப.திகாம்பரம், எமது கவனத்துக்கு கொண்டுவந்தார்.
“இதனையடுத்து, எனது அமைச்சின் கீழ் இங்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக அவர்களுக்கு காணியுறுதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக் எடுத்து வருகிறோம்.
“முதற்கட்டடமாக இரண்டாயிரம் காணி உறுதிகளை, இந்த மாத இறுதிக்குள் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என காணி அபிருத்தி மற்றும் நாடாளுமன்ற விவாகாரங்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் திகாம்பரத்தின் தலைமையில் பெருந்தோட்டப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, தனிவீடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றார்.
“பெருந்தோட்டப் பகுதிகளில் தனிவீடுகள் அமைக்கப்பட்டபோதும் அந்த வீடுகள் அமையப்பெறும் காணிகளுக்கு இதுவரை முழுமையான காணி உறுதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இது குறித்து காணி அமைச்சர் என்ற வகையில் எனது கவனத்துக்குக் கொண்டு வந்த அமைச்சர் திகாம்பரத்தின் வேண்டுகோளின் பேரில், நாங்கள் நாடாளுமன்றில் ஒன்றுகூடி பேசி இது தொடர்பில் நிலவக்கூடிய சிக்கல்களை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்துகொண்டுள்ளோம்.
“பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனது அமைச்சுக்குக் கீழ் இயங்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழு, காணி உறுதி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.
“முதற்கட்டமாக இரண்டாயிரம் காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்க நாம் ஆவணங்களை தயார் செய்து வருகின்றோம். அந்தப் பணிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் நுவரெலியா மாவட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரண்டாயிரம் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது” என்றுத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
44 minute ago
51 minute ago